பூமிக்கு வந்த ஹாரி பாட்டர் நாகினி பாம்பு - எங்கே தெரியுமா?
அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் பச்சை நிறம் கொண்ட சாலஸார் பிட் வைப்பர் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
90 கிட்ஸ்கள், 2000 தொடக்கத்தில் பிறந்தவரகள் கொண்டாடி ரசித்த படம் தான் ஹாரி பாட்டர். மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்து என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 8 பாகங்களாக உலகளவில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு சீரிஸாக ஹாரி பாட்டர் இருந்தது.
இதில் சில கதாபாத்திரங்களை மறக்கவே முடியாது அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் வோல்ட்மார்ட். ஏனெனில் முக்கிய வில்லன்களில் ஒருவர்தான் இந்த வோல்ட்மார்ட். இவரின் தோழியாக வரும் மற்றொரு கதாபாத்திரம்தான் நாகினி. மனித உருவில் இருக்கும் நாகினி இரவில் பாம்பாக மாறுவார். பின் முழுநேரமும் பாம்பாகி விடுவார். இந்த பாம்புடன் நாளடைவில் நெருக்கமாகும் வோல்ட்மார்ட் அதன்மீது காதலும் கொள்வான். தனது ஆன்மாவை ஏழாக பிரிக்கும் போது பாம்பிலும் ஒன்றை வைப்பான். அந்த பாம்பானது பச்சை நிறத்தில் இருக்கும்.
இந்நிலையில் ஹாரி பாட்டரின் இந்த கதாபாத்திர பாம்பு உண்மையில் பூமிக்கு வந்து விட்டதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹாரி பாட்டர் நாவலில் வரும் பாத்திரம் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்ட, பச்சை நிறம் கொண்ட சாலஸார் பிட் வைப்பர் பாம்பு, அசாம் மாநிலம் காஸிரங்கா தேசிய பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படத்தை முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
என்னனு கண்டுபிடிங்க குழந்தைகளே? காசிரங்கா நிஜ வாழ்க்கையின் ஹாரி பாட்டார் பாம்பை கண்டுபிடித்துள்ளது! சூப்பர் கூல் சாலஸார் பிட் வைப்பரை பாருங்கள். இது மேஜிக் போல பச்சை நிறத்தில் உள்ளது. அதன் வால் சிவப்பு -ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இயற்கை அற்புதமானது அல்லவா? எனக் குறிப்பிட்டுள்ளார்.