For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் பதிவு!

02:37 PM Jul 18, 2024 IST | Web Editor
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் பதிவு
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார்.

தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.  ஹார்திக் பாண்டியா இறுதி ஓவரினையும் சிறப்பாக முடித்து கொடுத்தார். இதனால் இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வென்று இந்தியா திரும்பிய இந்த அணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டா பக்கத்தில் 2023 உலக கோப்பையின் போது காயம் காரணமாக வெளியேறியபோது எடுத்த புகைப்படத்தினையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “2023 உலகக் கோப்பை காயத்திலிருந்து எனக்கு கடினமான பயணம் தான். ஆனால் அதனிடையே நான் எடுத்த முயற்சி தான் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு உதவியது. கடின உழைப்பு எப்போதும் கவனம் பெறாமல் போகாது. நாம் அனைவரும் நமது சிறந்த உழைப்பினை தர முயற்சிப்போம், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement