அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி!
ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. கடந்த 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் நிக்சன் கொண்டு வந்த செவிலியர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு உலக செவிலியர் தினத்தின் கருப்பொருள் 'செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது' என்பதாகும்.
இதனிடையே உலக செவிலியர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி,
தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி,
ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர்
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
செவிலியர் தின நல்வாழ்த்துகள்.… pic.twitter.com/RHVR8bh0PG— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 12, 2025
"தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் - பெண் வேறுபாடின்றி, சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
செவிலியர் தின நல்வாழ்த்துகள்". இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.