For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Happy New Year '2025' - நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !

07:45 AM Jan 01, 2025 IST | Web Editor
 happy new year  2025    நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
Advertisement

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வானவேடிக்கையுடன் களைகட்டி உள்ளது.

Advertisement

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு நிறைவடைந்து 2025-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்ததையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ள நிலையில் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளன.

Tags :
Advertisement