மத்தியப்பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தலைவர் கூறுகையில், மேற்கு மற்றும் கிழக்கு ம.பி.யின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
கடந்த 24 மணி நேரத்தில் ஜபுவா மாவட்டத்தில் 110.3 மி.மீ மழையும், பர்வானி மாவட்டத்தில் 109 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பர்வானி மாவட்டத்தில் 9 பகுதிகளில் 64.5 முதல் 115.5 மி.மீ வரை அதிக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ம.பி.யின் பல பகுதிகளிலும், மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.