Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருந்தால், மாநில அரசை குற்றம் சொல்லமாட்டேன்” - அண்ணாமலை பேட்டி

02:19 PM Dec 16, 2023 IST | Jeni
Advertisement

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருந்தால் நான் மாநில அரசை குற்றம் சொல்லமாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அவரது தந்தையாரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்.  அவரே ஒரு அறிக்கை வெளியிட்டு,  கேள்வி கேட்டு அவரே பதில் அளித்திருக்கிறார்.  சென்னை புயல் பேரிடர் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் தரவேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வைத்திருந்தோம்.

மத்திய குழு சென்னை வந்தது.  தமிழ்நாட்டின் 4 அதிகாரிகள் அவர்களை அழைத்து சென்றார்கள்.  அதிகாரிகள்,  இன்னொரு அதிகாரிகளுக்கு சாதகமாக தான் இருப்பார்கள். எனவே தமிழக அதிகாரிகள் நன்றாக பணியாற்றி இருப்பதாக மத்திய குழுவினர் தெரிவித்தனர்.  நாங்கள் அதனை ஏற்று கொள்ளப்போவதில்லை.  தண்ணியே இல்லாத இடத்தை அவர்களுக்கு காட்டி இருக்கிறார்கள்.

அரசுத் துறையில் பணியாற்றும் யாரும் முதலமைச்சர் நன்றாக பணியாற்றவில்லை என சொல்லமாட்டார்கள்.  எனவே திமுக அரசு,  புயல்,  வெள்ளத்தை கையாண்ட விதம் மோசம் என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும்.  பணம் கேட்ட உடனே கிடைக்காது. மத்திய அரசின் பேரிடர் பணம் என்பது, இழப்பின் கணக்கீட்டை பொறுத்துதான் தரப்படும். இது எதுவுமே தெரியாமல்,  பணத்தை விரைந்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்கிறார்.

பாஜகவை விட பழமையான கட்சி திமுக.  அதன் தலைவர்கள்,  தொண்டர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? பாஜகவை குறை சொல்கிறார்கள் என்றால்,  பாஜக வளர்ச்சி அடைகிறது என்று தான் அர்த்தம்.  மாநில அரசின் வேலை,  என்னென்ன சேதங்கள் இருக்கிறது என்பதை தான் பேச வேண்டும்.  குறை சொல்லக்கூடாது.  ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருந்தால், நான் மாநில அரசை குற்றம் சொல்லமாட்டேன்.

இதையும் படியுங்கள் : தேர்தலில் நிற்பது குறித்து முடிவெடுக்கவில்லை..! - தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி

அதிகாரிகள் புள்ளி விவரங்களை எடுப்பதற்காக தான்.  குற்றம் சொல்வதற்காக வரவில்லை.  அவர்கள் அரசியல் பேச மாட்டார்கள்.  பொறுப்பில் இருப்பவர்கள் குறை சொல்ல மாட்டார்கள்.  அப்படித்தான் இருக்க வேண்டும்.  அவர்கள் மத்திய அரசின் சார்பில் உதவி செய்ய இங்கே வந்திருக்கிறார்கள்.  நீங்கள் கோட்டை விட்டதை சொல்ல மாட்டார்கள்.  தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக அதிகாரிகள் சொல்லும் கருத்தை முதல்வர் எடுத்து கொண்டு வந்து பேசும் மோசமான நிலை நடக்கிறது” என்று தெரிவித்தார்.

Tags :
AnnamalaiBJPCMOTamilNaduMKStalinTNGovt
Advertisement
Next Article