புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
07:20 AM Feb 18, 2025 IST | Web Editor
Advertisement
இந்தியத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இன்று பதவி விலகும் நிலையில், ஞானேஷ் குமார் நாளை பதவியேற்கிறார்.
Advertisement
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான தேர்வுக் குழு ஞானேஷ் குமாரை தேர்வு செய்துள்ளது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் குமார் ஆவார்.
தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் இருப்பர். 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார், 2029-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருப்பார்.