Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CrimeNews | தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்தவர் கைது - போலீசார் தீவிர விசாரணை...

07:06 AM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கி மற்றும் 6- தோட்டாக்களுடன் தங்கியிருந்து, நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஈரோடு சக்தி சாலையில், வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான தனியார் தங்கும்
விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம்
தேதி முதல் 25-ந் தேதி வரை, 2 பேர் தங்கி இருந்தனர். பின்னர் அறையை காலி செய்து
விட்டு சென்றனர். அவர்கள் தங்கி இருந்த அறையை, ஊழியர் சுத்தம் செய்த போது
தலையணை அடியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், தோட்டாக்களும் இருந்தது.

விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்படி, வேணுகோபால் ஈரோடு நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விடுதிக்கு வந்த ஈரோடு நகர காவல்துறையினர்
நாட்டு துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் கைப்பற்றி தனியார் விடுதி
மேலாளர், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் சி.சி.டி.வி
கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து, துப்பாக்கியுடன் லாட்ஜில் தங்கி இருந்த நபர்கள் குறித்து அடையாளம் கண்டுபிடித்தனர்.

அந்த நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜவகர் உத்தரவின்
பெயரில், டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் டெல்லி விரைந்து சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி இருந்த 2 நபர்களின் போட்டோ மற்றும் வீடியோக்களை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் டெல்லியை சேர்ந்த முகமது மகன் உஷரீப்கான் (24) என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.

அவரை கைது செய்த போலீசார், ரயில் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துவந்து, தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து ஈரோடு நகர காவல்
துறையினர், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்த இரண்டு பேர் சட்டவிரோதமாக துப்பாக்கியுடன் விடுதியில் தங்கி இருந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ArrestErodegunPolice
Advertisement
Next Article