For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

07:48 PM Mar 26, 2024 IST | Web Editor
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு
Advertisement

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Advertisement

17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி முதல் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளும் முந்தய சீசனைப் போல்  மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடி, புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 26ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

சென்னை அணியும் குஜராத் அணியும் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், குஜராத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதிக்கொள்வதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் வரை அதாவது 28ஆம் தேதிவரை முதல் இடத்தில் கட்டாயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 28ஆம் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணி வென்று, ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவினால், 29ஆம் தேதி வரை முதல் இடத்தில் இருக்கும்  வாய்ப்பினைப் பெறவும் வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 2 முறையும் குஜராத் அணி மூன்று முறையும் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று களமிறங்குகியிருக்கிறது.

இதையடுத்து டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.

Tags :
Advertisement