GTvsRR | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.09) சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 6 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 7 இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர்
மஹீஷ் தீக்ஷனா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் குஜராத் அணியில், சுப்மான் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவாத்தியா, ரஷீத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.