For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GTvsRCB : 9 வீட்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

08:27 PM Apr 28, 2024 IST | Web Editor
 gtvsrcb   9 வீட்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி
Advertisement

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!

இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 45வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சஹா 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் விளாசியது. இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 44 பந்துகளில் 70 எடுத்தும் களத்தில் இருந்தனர். ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 3-வது வெற்றி இதுவாகும்.

Tags :
Advertisement