#GTvsPBKS | அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்... பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், முதலாவதாக களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஏப்ரல் 4) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸில் டேவிட் மில்லர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா கலமிறங்கினர். விருத்திமான் சாஹா 13 பந்தில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 8வது ஓவரில் 22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டினை ஹர்ப்ரீத் பிரார் பந்தில் இழந்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்தது.சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 13வது ஓவரில், தனது விக்கெட்டினை 19 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து, விஜய் சங்கர் 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில், 18வது ஓவரில் ரபாடா பந்து வீச ஹர்ப்ரீத் பிரார் கேச் செய்து வெளியேற்றினார்.இதன்மூலம், குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் சேர்த்திருந்தார். எனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.