GTvsLSG | மிட்செல் மார்ஷின் சதத்துடன் ரன்களை குவித்த லக்னோ - டேபிள் டாப்பருக்கு அதிகபட்ச இலக்கு!
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் 64வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே நல்லவிதமாக இருந்தது. அந்தளவிற்கு தொடக்க வீரர்களாக களம் கண்ட ஐடன் மார்க்ராமும் மிட்செல் மார்ஷும் சிறப்பாக பவர் ப்ளேவில் விளையாடினார்.
இதையடுத்து சாய் கிஷோர் வீசிய 10வது ஓவரில் ஐடன் மார்க்ராம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஒரு முனையில் மிட்செல் மார்ஷ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர், நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு அரைசதம் விளாசினார். அதன்படி இறுதி வரை களத்தி நின்ற பூரன் 56* ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 16* ரன்கள் அடித்தார்.
இறுதியாக 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 235 ரன்களை குவித்தது. இதையடுத்து ஏற்கெனெவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிய டேபிள் டாப்பர் குஜராத்துக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.