GTvsDC | டெல்லி அணி பேட்டிங் - முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(மே.18) சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள உள்ளது. டெல்லி அணி இதுவரை 11 லீக் போட்டிகள் விளையாடி 13 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணி அதே போல் 11 லீக் போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணி வென்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப்-குள் நுழையும். டெல்லி அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் சூழல் ஏற்படும். அந்த வகையில் இன்றைய போட்டி டெல்லி அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் டாஸை வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜராத் பிளேயிங் லெவன் :
சுப்மான் கில், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
டெல்லி பிளேயிங் லெவன் :
ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், டி. நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான்