Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம்” - செல்வப்பெருந்தகை கண்டனம்.!

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செலவபெருந்தகை ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம் என்று தெரிவித்துள்ளார்.
06:49 PM Sep 22, 2025 IST | Web Editor
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செலவபெருந்தகை ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

"கடந்த 8 ஆண்டுகளில், மக்கள் மீது ரூபாய் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டது! அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உடுத்தும் உடை, பாத்திரம், உணவு, விவசாயம், காப்பீடு – எதையும் விடவில்லை. இப்போது 8 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததாக பெருமை ஒன்றிய அரசு பேசுகின்றது. ’

இதனால், 144 கோடி இந்தியர்களுக்கு கிடைப்பது – ஒருவருக்கு ரூபாய் 57 மட்டுமே! அதிலும் வியப்பு என்னவென்றால், இந்த ரூபாய் 2.5 லட்சம் கோடி சலுகையும் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுப்பதல்ல. இது மாநிலங்களின் வரி பங்கு. அதை குறைத்துவிட்டு, பாராட்டை ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது. 'மாநிலங்கள் வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு புகழடைகிறது. மார்க்கெட்டிங் செய்வதில் ஒன்றிய அரசு வல்லவர்கள். ஒன்றிய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற போலி நாடகத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
GSTgst2pointolatestNewsselvaperunthagiTNCongressTNnews
Advertisement
Next Article