GSLV F15 ராக்கெட் - விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் வருகின்ற 29ம் தேதி காலை 6.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
📸 GSLV-F15 integration complete! Take a sneak peek at the incredible teamwork behind this mission:
Countdown: Less than 3 days to launch! Join us as we unlock new frontiers. 🚀
More information at: https://t.co/ttZheUYypF#GSLV #NAVIC #ISRO pic.twitter.com/UNlMRvV0nG
— ISRO (@isro) January , 2025
இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்துகிறது. இது நாட்டில் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துகிறது. இந்த ராக்கெட்டின் இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை (ஜன. 28) காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.