For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

05:47 PM Feb 17, 2024 IST | Web Editor
இன்சாட்   3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
Advertisement

இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணியளவில் வெற்றிகரமகாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Advertisement

வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதற்காக 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (16.02.2024) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

இதற்கு முன்பு இஸ்ரோ சாா்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இன்சாட்-3டி மற்றும் 3 டிஆா் திட்டங்களின் தொடா்ச்சியாக தற்போது இன்சாட்-3டிஎஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று (17.02.2024) மாலை 5.35 மணி அளவில் இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Tags :
Advertisement