கிராமி 2024 - இந்தியாவின் சக்தி இசைக்குழு விருது வென்று அசத்தல்..!
இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது.
உலகெங்கும் உள்ள் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக, அமெரிக்காவின் 'தி ரெக்கார்டிங் அகாடமி' என்ற அமைப்பு ஆண்டுதோறும் ‘கிராமி விருதுகள்’ வழங்கி வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவின் 'This Moment' என்ற ஆல்பம் கிராமி விருதை வென்றுள்ளது. ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோர் இந்த சக்தி இசைக்குழு இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : இமாச்சலில் ஆற்றில் கவிழ்ந்த கார் - சைதை துரைசாமியின் மகன் மாயம்..!
விருது வென்ற பின் விழாவில் பேசிய பாடகர் ஷங்கர் மகாதேவன், “எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.