டிடிஎஃப் வாசனுக்கு அடுத்த கிடுக்கிப்பிடி! நீதிமன்றம் அதிரடி!
காவல் துறையினரின் பரிந்துரையை ஏற்று டிடிஎஃப் வாசனின் சேனலை முடக்குமாறு யூ டியூப் நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்துக்கு உள்ளான வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில், டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார்.
முன்னதாக டிடிஎப் வாசன் வழக்கில், அவரது youtube சேனலை ஏன் முடக்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் காவல்துறையினரும் அவரது youtube சேனலை பார்த்து பல இளைஞர்கள், கெட்டுப் போவதாகவும் அவரது youtube சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினர் கோரிக்கையை ஏற்று தற்பொழுது டிடிஎஃப் வாசனின் சேனலை முடக்க யூ டியூப் நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.