ஆளுநர் தேநீர் விருந்து - தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
02:34 PM Jan 26, 2025 IST | Web Editor
Advertisement
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினமான இன்று (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு மாலை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
Advertisement
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி வேண்டாம் என்று பேசி இருந்தார். தொடர்ந்து நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதற்கு கண்டம் தெரிவித்தார்.
சமீபத்தில் ஆளுரை நேரில் சந்தித்த விஜய், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்வத்தையடுத்து தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சில கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.