For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது! - உச்சநீதிமன்றம்

12:54 PM Nov 24, 2023 IST | Web Editor
சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது    உச்சநீதிமன்றம்
Advertisement

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Advertisement

பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து,  கடந்த ஜூன் 19, 20 மற்றும் அக்டோபர் 20-ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமர்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நவம்பர் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:“ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர்” – மல்லிகார்ஜுன கார்கே

இதன் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்றிரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • பேரவை நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும்.
  • பேரவை சிறப்புரிமைகளின் பாதுகாவலராக அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரவைத் தலைவர், பேரவையை ஒத்திவைப்பதில் அவரது அதிகார வரம்புக்குள் சிறப்பாகச் செயல்பட்டார்.
  • மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காப்பாண்மைத் தலைவராக ஆளுநருக்கு சில அரசமைப்பு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  • எனினும், மாநில சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :
Advertisement