தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இந்த மனு மீதான விசாரணையில், ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அனுமதி இல்லை என்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் ஆளுநரை கண்டித்தது. அத்துடன் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், நிர்வாக செயல்பாட்டில் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது என்று கூறி சூப்பர் நாடாளுமன்றம் என்று உச்சநீதிமன்றத்தை விமர்சனம் செய்தார். இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்து துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். 4வது ஆண்டாக ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதாக ஆகிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து இந்த 2 மசோதாக்களும் தமிழ்நாடு அரசிதழில் வெளியாகி உள்ளது.