Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
11:20 AM Jul 02, 2025 IST | Web Editor
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார்.  இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : Rain Alert | 6 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அஜித்குமார் மிருக்கத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும், கொலை செய்பவர் கூட இதுபோல தாக்கமாட்டார் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமாரின் சகோதரருக்கு (தம்பி) படிப்பிற்கு ஏற்ப அரசுப்பணி வழங்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிலையில், அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரிய கருப்பன் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். மேலும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
Tags :
AjithkumarAjithkumar CaseGovt JobMK StalinPolicesivagangaTN Govt
Advertisement
Next Article