For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு... எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
09:18 AM Mar 20, 2025 IST | Web Editor
அரசு பேருந்து ஓட்டுநர்  நடத்துநர்  காலிப்பணியிடங்கள் அறிவிப்பு    எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்
Advertisement

அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கும்பகோணத்தில் 756 இடங்களும், சேலத்தில் 486 இடங்களும், சென்னையில் 364 இடங்களும் நிரப்பப் பட உள்ளன.

Advertisement

இதேபோல், திருநெல்வேலியில் 362 இடங்களும், கோவையில் 344 இடங்களும், மதுரையில் 322 இடங்களும், விழுப்புரத்தில் 322 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 இடங்கள் நிரப்பப் பட உள்ளன.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10  இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு! - News7 Tamil

எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement