For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூகுள் குறுஞ்செய்தி செயலி இனி உங்கள் உரையாடல்களை கவனிக்கும்!

10:10 PM Jan 30, 2024 IST | Web Editor
கூகுள் குறுஞ்செய்தி செயலி இனி உங்கள் உரையாடல்களை கவனிக்கும்
Advertisement

கூகுள் குறுஞ்செய்தி செயலி உங்களது உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Advertisement

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.  அதோடு பயனாளர்களுக்கு ஏற்றவாறு வசதிகளையும் அளிக்கிறது.  இதில் பொதுவாக நாம் கூகுளில் சென்று நமக்கு தேவைப்படும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

நமக்கு தேவைப்படும் வலைதளங்களையும் பயன்படுத்த முடியும்.  இதில் நாம் தேடுவது பிறருக்கு தெரிய வேண்டாம் என்றால் பாதுகாப்பு கருதி நாம் கூகுளின் Incognito மோடினை பயன்படுத்தலாம். இதில் நாம் தேடும் தகவல்கள் எதுவும் கூகுள் ஹிஸ்டரியில் இருக்காது. இதனால் Incognito மோடையும் அதிகம் பேர் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் அதற்கும் கூகுள் செக் வைத்துள்ளது.  தற்போது Incognito மோடில் நாம் உள்ளே சென்றால், "நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்" என்ற வாசகம் அதில் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.  Incognito மோடில் பயனாளர்கள் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது கூகுள் இந்த வாசகத்தை சேர்த்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:  டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழு முதலிடம் பிடித்து அசத்தல்!

இந்த நிலையில் கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான 'கூகுள் மெசேஜஸ்' (Google Messages)-ல்  தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது.   இது தொடர்பான சோதனையும் செய்துவருகிறது.  அந்த புதிய அம்சம் கொண்ட குறுஞ்செய்தி செயலி உங்களது உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்?  என்ன பேசுகிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுபவருடனான உங்களது உறவு என்ன? நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன? எங்கு எப்படி பேசுவீர்கள்? என்பதையும் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.  அதுமட்டுமன்றி கண்காணிக்கப்படும் எழுத்து வடிவிலான விவரங்கள் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement