'டிராக்கிங் ப்ரொடெக்ஷன்' மூலம் 3 கோடி பயனர்களுக்கு குக்கீகளை முடக்கிய கூகுள்!
கூகுள் 'டிராக்கிங் ப்ரொடெக்ஷன்' அம்சத்தை இன்று சோதனை செய்த நிலையில், 3 கோடி குரோம் பயனர்களுக்கு இணைய குக்கீகளை முடக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஐடி நிறுவனமான கூகிள் தனது தயாரிப்புகளில் ஒன்றான கூகிள் குரோம் பிரௌசரில் ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ என்ற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும், குரோமில் உள்ள குக்கீகளை உலகெங்கிலும் உள்ள 3 கோடி மக்களுக்காக அல்லது கூகிள் குரோமின் மொத்த பயனர்களில் 1 சதவீதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், அந்த சோதனை இன்று (ஜன. 4ம் தேதி) முதல் சோதனை செய்யப்பட்டது.
இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது மொபைல், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பார்வையிடும் இணையதளத்தைத் தவிர, வேறு ஒரு இணையதளத்தின் மூலம் வைக்கப்படும் குக்கீ ஆகும்.
இதையும் படியுங்கள் : காங்கிரசில் இணைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா..!
மேலும், அனைத்து குரோம் பயனர்களில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த யோசனை செயல்படுத்தப்பட்டாலும், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் குக்கீகளை அகற்ற கூகிள் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், கூகுளின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று விளம்பரம் என்பதால், இது குக்கீகளை முழுமையாக அகற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு இணையதளங்களில் இருந்து குக்கீகளைத் தடுக்கும் முயற்சியில், Google கண்காணிப்பு பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் கிராஸ் சைட் டிராக்கிங்கை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது ஜனவரி 4 முதல் Windows, Mac, Linux, Android மற்றும் iOS முழுவதும் 3 கோடி Chrome பயனர்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.