இனி வெயிலுக்கு குட்பை... வெளுக்கப்போகும் கோடை மழை... வானிலை ஆய்வாளர் சொன்ன குட்நியூஸ்!
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பைவிட வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் அனைவரும் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, வரும் மே 7ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.