For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!

07:26 PM Nov 16, 2023 IST | Web Editor
நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன   நடிகர் எஸ் ஜே சூர்யா பேட்டி
Advertisement

விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது மகிழ்ச்சி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் திரையிடப்பட்டுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ரசிகர்களுடன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கண்டுகளித்தனர். இதனைத்தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பயங்கரான சந்தோஷத்தை அளித்துள்ளது. தலைவர் ரஜினிகாந்த் குறிஞ்சி மலர் என பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. கார்த்திக் சுப்புராஜூக்கு சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இந்த படம் அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவி படத்தில் நல்ல நடிகராக எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. 

ராகவா லாரன்ஸ் திரையிலும், திரைக்கு பின்னும் கதாநாயகன் தான். மக்களின் ரசிப்புத்தரம் உயர்ந்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி நிறைய இடங்களில் ஹவுஸ் புல்லாக படம் ஓடி இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது. 

ரஜினிகாந்த் என்னை நடிகவேலுடன் கம்பேர் செய்து பேசியது எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதது. ’வில்லன்; என ஒருபடம் நடிக்கிறேன். அதற்கு இந்த வாழ்த்து உற்சாகமளிப்பதாக உள்ளது. நல்ல நல்ல கதைகள் நம்மை தேர்ந்தெடுக்கிறது. இரண்டு ஹீரோவாக நடித்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இனி தனி ஹூரோவாக நடித்து தனித்து ஓட வேண்டும்.” இவ்வாறு அவர் பேட்டியளித்தார். 

Tags :
Advertisement