#GoldRate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து (2024) நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த சூழலில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 ஆண்டின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன் படி,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7ஆயிரத்து150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.