மீண்டும் எகிறிய #GoldRate | இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 57,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50,000 கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.55,000 கடந்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது.
ஒரு கட்டத்தில் ரூ.50,000-க்கும் கீழ் வந்துவிடும் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது. தங்கம் விலை ஏறுமுகத்திலேயே தொடர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இதனிடையே, கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.56,960-க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ. 200 குறைந்து ரூ. 56,760 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் - #Chennai போக்குவரத்துக் கழகம்!
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 103– க்கு விற்பனை செய்யப்படுகிறது.