For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தங்கமான மனுஷன்” | இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விஜயகாந்த் குறித்த பதிவு!

04:12 PM Dec 28, 2023 IST | Web Editor
“தங்கமான மனுஷன்”   இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விஜயகாந்த் குறித்த பதிவு
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து முகநூல் பக்கத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பதிவு இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார்.  அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல்,  காய்ச்சல்,  சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால்,  மருத்துவமனையில் இருந்து கடந்த டிச.12-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார்.  இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.  அதன் பின்னர்,  அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து விஜயக்காந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் அவரது உடல்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து முகநூல் பக்கத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் இட்ட பதிவு இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,  “எங்க ஊர் விருத்தாசலம்ல தான் முதன்முறையா MLA ஆனார்.  அப்போ கம்ப்யூட்டர் class பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ middle class ladiesக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு...  இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு.

சினிமால கேப்டன் ah அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் mla வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு... தங்கமான மனுஷன் Miss you sir” என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement