Gold Rate | இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.74,320-ருபாய்க்கு விற்பனையாகிறது.
10:41 AM Aug 14, 2025 IST | Web Editor
Advertisement
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சம் பெற்றது.
Advertisement
இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று குறைந்து வந்த தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.