Gold Rate | தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனிடையே நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.
இதையும் படியுங்கள்: தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்திற்கு இயக்குநர் செல்வராகவன் பாராட்டு!
இதற்கிடையே, தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,400-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.