For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GOLD RATE | மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை..!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
10:28 AM Sep 29, 2025 IST | Web Editor
தங்கம் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
gold rate   மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை
Advertisement

தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையான தங்கம் விலை கடந்த செப்.6-ஆம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள்  தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கடந்த 27 ஆம் தேதி தங்கம் விலை  சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement