சென்னையில் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,795-க்கும், ஒரு சவரன் ரூ.46,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல வெள்ளியின் விலையும், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.
புதன்கிழமை விலை நிலவரம் :
1 கிராம் தங்கம் ரூ.5,835
1 சவரன் தங்கம் ரூ.46,680
1 கிராம் வெள்ளி ரூ.80.20
1 கிலோ வெள்ளி ரூ.80,200
செவ்வாய் கிழமை விலை நிலவரம் :
1 கிராம் தங்கம் ரூ.5,795
1 சவரன் தங்கம் ரூ.46,360
1 கிராம் வெள்ளி ரூ.79.20
1 கிலோ வெள்ளி ரூ.79,200