அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - குற்றவாளி ஞானசேகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர், சிறப்பு புலனாய்வு குழு உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
நேற்று ஞானசேகர் வசிக்கும் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள், பட்டாக்கத்தி ,பென் டிரைவ், பென் கேமரா போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ஞானசேகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே ஞானசேகர் 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.