மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.7150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஆனது 7135 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரன் 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 120 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.