For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை சரிவு! எவ்வளவு தெரியுமா?

11:20 AM Jan 11, 2024 IST | Web Editor
தங்கம் விலை சரிவு  எவ்வளவு தெரியுமா
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள்: டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!

அந்த வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.5,810-க்கும்,  பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement