ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு! இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கு விற்பனையாகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்த வகையில், சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் - 06 ) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 க்கும் விற்பனையானது.
இதையும் படியுங்கள் : குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்!
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும், ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ.6,090-க்கும் விற்பனையாகிறது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1220 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை அந்த வகையில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனையாகிறது.