“பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” - சரத்குமார் பேட்டி
பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்ட குழு இன்னும் 15 நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்றார். பாஜக உடன் இணைய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும் என்றும், பிரதமர் ஒரு கட்சியைச் சார்ந்தவர் என நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.
தென் மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு இருக்கலாம் என்று பதிலளித்த சரத்குமார், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தான் நிர்வாகிகள் நியமித்திருப்பதாக கூறினார். மேலும், விளம்பரத்திற்காக அரசியல் செய்யக்கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : டெங்கு, மலேரியா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 பொருளாதார ரீதியாக உதவியாக
இருக்கும் என்று கூறிய சரத்குமார், அதனால் மக்களது வாழ்வாதாரம் உயராது என்று தெரிவித்தார். புதிய அரசியல் கட்சிகள் இளைஞர்கள் இடையே மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இருக்கும் கட்சிகளிலேயே நல்ல கட்சியை தேர்ந்தெடுங்கள் என்றார்.