For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'#GOAT' திரைப்படத்திற்கு விறுவிறுப்பான முன்பதிவு! டிக்கெட் விலை அதிகம் இருப்பதாக ரசிகர்கள் புகார்!

01:13 PM Aug 31, 2024 IST | Web Editor
  goat  திரைப்படத்திற்கு விறுவிறுப்பான முன்பதிவு  டிக்கெட் விலை அதிகம் இருப்பதாக ரசிகர்கள் புகார்
Advertisement

GOAT திரைப்படத்தின் முதல்நாள் டிக்கெட்டின் பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக்கத் தகவல் வெளியாகி வருகிறது.  

Advertisement

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது நடிகர் விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் நேரம் 3 மணி நேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் 390 ரூபாய்க்கு டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் வேண்டுமென்றால் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கட்டாயமாக வாங்க வேண்டும் என நிபந்தனை வைத்து இப்படி டிக்கெட் விலையை அதிகரிப்பது அப்பட்டமான செயல் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Tags :
Advertisement