“விரைவில் ஆடு, மாடுகள் மாநாடு” - சீமான் பேச்சு!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பூரிகுடிசை பகுதியில் நடைபெறும் 4 ஆம் ஆண்டு ‘ஆறாம் தினை பனை திருவிழா’ இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ஆட்சியாளர்கள் நாங்கள் பனக்காட்டு நரி என்பார்கள். ஆனால் நாங்கள்தான் அந்த பனங்காடே!. இன்னும் எங்கள் ரேசன் கார்டுகளின் மாடுகளின் பெயர் உள்ளது. எங்கள் குடும்ப புகைபடத்தில் எங்கள் மாடுகளின் புகைபடமும் உள்ளது. இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வாய்காள் வரப்புகளில் சிமெண்ட் கொண்டு பூசுவதால் தண்ணீர் நிலத்தில் ஊராமால் நேராக செல்கிறது.
தக்காளி விளைவிப்பவன் விலையை நிர்ணயிக்க முடியவில்லை, வாங்குபவர் விலையை நிர்ணயிக்கிறார்கள். நான் படிக்கும் போது பணக்கார நோய் எது என்ற கேள்விக்கு சக்கரை நோய் என பதில் எழுதி ஒரு மதிப்பெண் பெற்று உள்ளேன். உலகத்தில் கள் குடித்து இறந்தவர்களின் பட்டியல் மற்றும் தாலி அளித்தவர்களிப் பட்டியலை சொல்லவும். டாஸ்மாக் கடைகளில் விற்கபடுவது மது அல்ல அது விஷம்.
மது போதை பழக்கத்தில் விழாதீர்கள் என அப்பா சொல்கிறார். ஆனால், அந்த கடையின் ஓனரே அவர் தான். ஆடு மாடு கோழியில் கூட வீரத்தை சொல்லி கொடுத்தது தமிழ் பரம்பரை. விலையை விவசாயிகள் தீர்மாணிக்க முடியாது. அதனை வாங்குபவன் தீர்மாணிக்கிறான். விவசாயிகள் வாழ்ந்தால் அந்த நாடு வளர்கிறது என்று அர்த்தம். ஆனால், விவசாயிகள் இறக்கிறான் என்றால் அது நாடு இல்லை.
அன்றைக்கு எங்கேயாவது சர்க்கரை நோய் இருந்தது. ஆனால், இன்று சர்க்கரை நோய் இல்லாதவன் யாரும் இல்லை. காரணம் ரசாயன உணவு பொருள். கள் போதை பொருள் என்றால், அரசு மதுபான கடையில் விற்பனை செய்வது என்ன புனித நீரா அல்லது கோயில் தீர்த்தமா?.
கள் உணவின் ஒரு பகுதி. கள் குடித்து இறந்தவர்கள் யாரும் இல்லை. நான் படிக்கும் போது கல்லூரி வாசலில் கள் கடை இருந்தது. கல்லூரிக்கு போகும்போது கள் குடித்துவிட்டு செல்வோம். திரும்ப வரும்போது கள் குடிப்போம். அந்த வாழ்கை ராஜ வாழ்கை. கள் மது அல்ல. அரசு மதுபான கடையில் விற்பது ரசாயனம். விரைவில் தேனி மாவட்டத்தில் ஆடு, மாடுகள் மாநாடு நடத்தவுள்ளேன், கள் இறக்கும் போராட்டமும் நடத்த உள்ளேன்”
இவ்வாறு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.