For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவா லைராய் தேவி கோயில் திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு...15 பேர் காயம்!

கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
09:46 AM May 03, 2025 IST | Web Editor
கோவா லைராய் தேவி கோயில் திருவிழா  கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு   15 பேர் காயம்
Advertisement

கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Advertisement

கோவாவின் பிரபல புனித யாத்திரைத் தலமான லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் நடக்கும் தீமிதி சடங்கை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

சுமார் 1,000 போலீசார் பணியில் இருந்த நிலையிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இயலவில்லை. கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement