For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GNI 2024 : இந்திய மொழிகள் திட்டத்தால் 8.74% அதிகரித்த நியூஸ்7 தமிழ் இணையதள பார்வையாளர்கள்!

04:44 PM Dec 24, 2024 IST | Web Editor
gni 2024   இந்திய மொழிகள் திட்டத்தால் 8 74  அதிகரித்த நியூஸ்7 தமிழ் இணையதள பார்வையாளர்கள்
Advertisement

GNI இந்திய மொழிகள் திட்டம் 2.0 பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கான டிஜிட்டல் பரப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக செய்தி பார்வைகள் உள்ளடக்கம் (NCI), மற்றும் ஜென் ஏஐ கருவிகள், பின்பாயிண்ட் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் முன்னணி கருவிகளின் பங்களிப்பு மிகுந்த உதவியாக இருந்தன.

Advertisement

GNI இந்திய மொழிகள் திட்டம் என்பது செய்தி வெளியீட்டாளர்களுக்கான டிஜிட்டல் பரப்பை மேம்படுத்துவதற்காக குறிப்பாக பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் பரப்பை அதிகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக திட்டம். இந்த திட்டமானது GOOGLE NEWS INITIATIVES மற்றும் MEDIOLOGY நிறுவனம் இணைந்து கடந்த ஆண்டு முதன் முறையாக இந்த திட்டத்தை தொடங்கின. நாடு முழுவதிலும் இருந்து பல நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் GNI இந்திய மொழிகள் திட்டத்திற்கு விண்ணப்பித்ததில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இணையதளங்களில் நியூஸ்7 தமிழ் இணையதளமும் ஒன்று.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வான இணையதளங்களில் மூன்று கட்ட பயிற்சியையும் நிறைவு செய்தது நியூஸ் 7 தமிழ். முதல் கட்டமாக இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை சரிசெய்து வாசகர்களின் பயன்பாட்டுக்கு இலகுவாக மாற்றியமைத்தனர். இரண்டாம் கட்டமாக GNI மற்றும் mediology நிறுவனம் இணைந்து நியூஸ்7 தமிழுக்கு அப்ளிக்கேஷன் ஒன்றை உருவாக்கி தந்தனர். மூன்றாவது கட்டத்தில் இணையதள கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கும் விதமாக டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் நிதியும் வழங்கி உதவியது.

GNI இந்திய மொழிகள் திட்டத்தின் இரண்டாவது சீசனுக்கும் நியூஸ்7 தமிழ் தேர்வானது மிக முக்கியமான ஒன்று. இந்த திட்டமானது 3 கட்ட விரிவான அணுகுமுறையை கொண்டுள்ளது. இணையதள செயல்பாட்டை மேம்படுத்த, உள்ளடக்கத்தை அதிகரிக்க, மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு வகையான பயனாளர்களிடம் சென்றடைய இணையதளத்தை வலுப்படுத்துவதற்கான நவீன தீர்வுகளை உள்ளடக்கியது. GNI குழுவும் மற்றும் மீடியாலஜி குழுவும் இந்த திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வந்தன.

திட்டத்தின் பயன்பாடுகள்:

இணையதளத்தின் செயல்திறன் பரிசோதனை:

இணையதளத்தின் வேகம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவது மிக முக்கியமான ஒரு அம்சமாக இருந்தது. இது பயனாளர்கள் தளத்திற்குள் வரும்போது கவனம் இழக்காமல் தொடர்ந்து தளத்திலேயே தக்க வைப்பதை உறுதி செய்வதாகும்.

உள்ளடக்கம் வடிவங்கள்:

இணையதளத்தின் உள்ளடக்கத்தை பல்வேறு வடிவங்களில் எளிதாக்குவது, பகிர்வை அதிகரிப்பதற்காகவும், பல்வேறு வகையான பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றி அமைப்பது என பயனாளர்கள், வாசகர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்க முதல் கட்ட இத்திட்டம் பெரிதும் உதவியது. முதல் கட்டத்தில் இணையதளத்தை பரிசோதனை செய்து, பயன்பாட்டிற்கு ஏதுவாக தரமானதாக மாற்றுதல் உள்ளிட்டவற்றை செய்த நிலையில், இரண்டாம் கட்டத்திற்கு தேர்வான செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு புதிய உள்ளடக்க பார்வைகளை அறிமுகப்படுத்தியது, புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் பிராந்திய மொழி பயன்பாடுகளுக்கும் உகந்த கருவிகளை அறிமுகப்படுத்தியது இத்திட்டத்தின் முக்கிய மைல்கல்.

இத்திட்டத்தில் இணைவதற்கு முன், மற்றும் இணைந்தபின் நியூஸ்7 தமிழின் பகுப்பாய்வு ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GNI திட்டத்தில் இணைவதற்கு முன்பான ஜூன் மாத பகுப்பாய்வு
GNI திட்டத்தில் இணைந்த பின் அக்டோபர் மாதத்திற்கான பகுப்பாய்வு

இரண்டாம் கட்டத்திற்கு நியூஸ்7 தமிழ் தேர்வானது முக்கியமான ஒன்றாகும். இந்த புதிய கருவிகளின் பயன்பாடு என்ன என்பதை விரிவாக தற்போது பார்க்கலாம்.

செய்தி பார்வைகள் உள்ளடக்கம் (NCI):

GNI இந்திய மொழிகள் திட்டத்தின் இரண்டாவது சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதமான கருவிகளாகும். செல்போனிலயே இணையதளத்தின் தரவுகளை, உள்ளடக்கங்களை மிக எளிதாக பார்த்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இந்த தரவை பயன்படுத்தி, செய்திகளை அதற்கேற்ப வழங்கவும், எவ்வித தகவல்களுக்கு பயனாளர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை அந்தந்த தருணங்களிலயே அறிந்து அதற்கேற்ப செய்திகளை வழங்க இந்த கருவி உதவுகிறது.

ஜென் ஏ ஐ கருவிகள் (GEN AI TOOL):

உற்பத்தி செயற்கை நுண்ணறிவு (Generative AI):

செய்தி வெளியீட்டாளர்களுக்கான பயன்பாடுகள் மற்றும் போக்குகள் கண்டறிய உதவுகிறது. செய்திகளை பல்வேறு கோணங்களில் அணுகி அதனை உருவாக்குவதற்கும், ஒரே செய்திக்கு பல்வேறு தலைப்புகளை பெற்று அதில் சிறந்த தலைப்பை தேர்வு செய்யும் விதமாகவும் மற்றும் உள்ளடக்கத்தை திறம்பட, முறையாக மாற்றுவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கருவியான இது சிறப்பான பங்களிப்பை செய்கிறது. பார்வையாளர்களின் தனிப்பயனாக்கம், உள்ளடக்க உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, செய்தி உருவாக்குபவர்களின் உற்பத்தி திறனையும் மேம்படுத்துகிறது.

பின் பாயிண்ட்:

இது செய்தியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிய தொகுதிகளை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. மேலும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் பின்பாய்ண்ட் உதவுகிறது. பயனர்கள் துல்லியமான தகவல்களை search operators அல்லது filters மூலம் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

ரியல்டைம் உள்ளடக்கம் பார்வைகள் (RCI), செய்தி உள்ளடக்கப் பார்வைகள் (NCI), மற்றும் ஜென் ஏ ஐ கருவிகள், பின்பாயிண்ட் உள்ளிட்ட கருவிகள் இரண்டாவது சீசனில் மிகுந்த உதவியாக இருந்தன. மேலும், இந்த கருவிகளை தமிழில் பயன்படுத்தும் போது ஏற்படும் சவால்களை நேரடியாக நேர்முக கூட்டங்களில் தெளிவுபடுத்தியது மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது. மொழிவாரியாக தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கூட்டங்களை நடத்தி பல்வேறு சந்தேகங்களுக்கு அவரவர் மொழியிலேயே விளக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு திட்டத்தின் முழு பலனையும் அடைய உதவியது.

மேலும் இந்த திட்டத்தில் Google Ad Manager மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. AdSense vs. Google Ad Manager க்குமான வேறுபாடுகள். சிறிய செய்தி நிறுவனம் மற்றும் நடுத்தர மற்றும் பெரிய அளவில் வர்த்தக பயன்பாடுகளை கொண்ட செய்தி நிறுவனங்கள் விளம்பரங்களை கையாள்வதற்கான பயற்சிகளை வழங்கியது. நேரடி ஒப்பந்தங்கள், தனிப்பட்ட ஏலங்கள் மற்றும் பல விளம்பர பரிமாற்றங்களை எப்படி கையாள வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

GNI இந்திய மொழிகள் திட்டம் 2.0 திட்டத்திற்கு சிறப்பான பங்காற்றலை தந்த GOOGLE NEWS INITIATIVES மற்றும் MEDIOLOGY நிறுவனத்தின் பங்களிப்பிற்கு நன்றி என்பது சிறிய வார்த்தையாகவே இருக்கும். இதே போல் வருங்காலங்களிலும் பிராந்திய செய்தி வெளியாட்டாளர்களுடன் இணைந்து செயல்படவும், டிஜிட்டல் பரப்பில் சிறந்த பலன்களை அடையவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GNI இந்திய மொழிகள் திட்டத்தில் உள்ள குழுக்கள் முழு அர்ப்பணிப்போடும், உத்வேகத்தோடும் செயல்பட்டது. மேலும் முன்னணி கருவிகள் மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதில் அதிக முனைப்பு காட்டியதும் தான் இந்த திட்டத்தை வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தது. இந்த திட்டத்தின் பயனாக டிஜிட்டல் செய்தி பரப்பை மேம்படுத்துவதிற்கான வலிமையை பெற்றதோடு, இந்த திட்டம் மூலம் பிராந்திய மொழி இணையதளங்கள் தரமான வளர்ச்சியும் தாக்கத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.

Tags :
Advertisement