For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GNI 2.0 இந்திய பிராந்திய மொழிகள் திட்டம் | நியூஸ்7 தமிழ் மீண்டும் தேர்வு!

12:37 PM Oct 11, 2024 IST | Web Editor
 gni 2 0 இந்திய பிராந்திய மொழிகள் திட்டம்   நியூஸ்7 தமிழ் மீண்டும் தேர்வு
Advertisement

Google News Initiative இந்திய பிராந்திய மொழிகள் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கும் நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் தேர்வு செய்யபட்டுள்ளது.

Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து வழங்கி வருகிறது. வெறுமனே செய்திகளாக கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தருகிறது நியூஸ் 7 தமிழ்.

நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது.

இந்நிலையில், Google News Initiative இந்திய பிராந்திய மொழிகள் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கும் நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நியூஸ் 7 தமிழ் மகிழ்ச்சியடைகிறது. அர்ப்பணிப்புடன் முதல் கட்டத்தை நிறைவு செய்ய உதவிய GNI மற்றும் மீடியாலஜிக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

முன்னதாக, Google News initiatives செய்தி வெளியீட்டாளர்களுக்கு செயல்படுத்திய GNI இந்திய மொழிகள் திட்டம், LGBTQ+ சமூகத்தின் பால் புதுமையினர்களின் பிரச்னைகளை பேசும் Inclusive Newsroom Fellowship, தேர்தல் நேரத்தில் உண்மை செய்தி சரிபார்ப்பு திட்டமான Shakti Collective ஆகிய 3 திட்டங்களிலும் நியூஸ் 7 தமிழ் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டது.

Shakti Collective திட்டமானது இந்தியாவின் பொதுத்தேர்தலின் போது பொதுமக்கள் சரியான தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாக போலி செய்திகளை கண்டறிந்து அதன் உண்மை தன்மையை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை GNI மற்றும் Data Leads நிறுவனம் இணைந்து சர்வதேச உண்மை செய்தி சரிபார்ப்பு வல்லுநர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்புடன் 50 செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 28 மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் Shakti Collective திட்டமானது செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் மட்டுமே தேர்வானது.

மதம், இனம், மொழி அடிப்படையில் மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்பட்ட போலி செய்திகளை கண்டறிந்து சரிபார்த்து தேர்தல் சமயத்தில் ஒன்றரை மாத காலம் உண்மை செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக, உண்மை சரிபார்ப்பு செய்தி வெளியீட்டாளர்கள் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிட்ட செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் செய்தியாகவும் அதன் சமூக வலைதளங்களில் வீடியோக்களாகவும் மறு வெளியீடு செய்தது.

இந்த திட்டத்தில் News7 Tamil டிஜிட்டல் பிரிவு 141 செய்திகளை மறுவெளியீடு செய்து பிராந்திய மொழிகளில் அதிக செய்திகளை மறுவெளியீடு செய்த நிறுவனங்களில் முதன்மை இடத்தை பெற்றது. இதனை கவுரவிக்கும் வண்ணம், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெற்ற Google India News summit 2024 நிகழ்வில் நியூஸ்7 தமிழுக்கு சிறந்த பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர் –  Google-ன் “தலைவா” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விருதினை இந்தியாவின் Google News Partnership தலைவர் துர்கா ரகுநாத் வழங்க நியூஸ் 7 தமிழின் அப்போதைய டிஜிட்டல் பிரிவு தலைவரும் தற்போதைய தலைமை செய்தி ஆசிரியருமான சுகிதா சாரங்கராஜ் பெற்றுக் கொண்டார். ஊடக உலகில் முன்னணியில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, Google-ன்  “தலைவா” விருதை வென்றது நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு.

இந்த நிலையில், Google News Initiative இந்திய பிராந்திய மொழிகள் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கும் நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் தேர்வு செய்யபட்டுள்ளது.

Tags :
Advertisement