Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறுமி உயிரிழப்பு - பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது!

08:12 AM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் (34). இவரது மனைவி சிவசங்கரி (32). இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை உள்ளது. லியா லட்சுமி விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பள்ளி இடைவேளையின் போது வெளியே சென்ற மாணவி லியா லட்சுமி, மீண்டும் வகுப்பறைக்கு வராததால் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் தேடியுள்ளனர். பின்னர் பள்ளி கழிவுநீர் தொட்டியில் லியா விழுந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுமி இறந்த தகவலை அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல், பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களை மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு அனுப்பினர்.

வழக்கம் போல் சிறுமி லியா லட்சுமியை அழைத்து செல்ல அவரது தாத்தா கார்மேகம் பள்ளிக்கு சென்றபோது, லியாலட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து பள்ளியின் முன் திரண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும், சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. உடலில் சிராய்ப்பு காயங்கள் இல்லை. துணி ஈரமாக இல்லை. வேறு எந்த வகையிலோ சிறுமி இறந்துள்ளதை, பள்ளி நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினர்.

தகவலறிந்த டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பள்ளியில் கூடியிருந்த பெற்றோர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மாலை 4.15 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, 4:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக பள்ளியின் தாளாளர் சிமேல்தா(65), பள்ளி முதல்வர் லோமினிக் மேரி (50), பள்ளி ஆசிரியர் ஏஞ்சல் (33) பேரையும் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்துள்ளனர். IPC 105 கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

 

Tags :
Arrestprivate schoolseptic tankUKG StudentViluppuram
Advertisement
Next Article