For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிய “கில்லி” - கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்!

10:59 AM Apr 20, 2024 IST | Web Editor
ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிய “கில்லி”   கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்
Advertisement

ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்தை பிரான்ஸில் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி.  தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2004ம் ஆண்டு திரைக்கு வந்தது,  தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக்கான இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படமாக அமைந்தது.  பட பாடல்கள்,  பிரகாஷ் ராஜ் சொல்லும் ஹாய் செல்லம் வசனம்,  அதிரடி காட்சிகள் என படத்தில் எல்லாமே செம ஹிட் தான்.

படு ஹிட்டான கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டர் தரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்  மீண்டும் திரைக்கு வந்துள்ளது.  20 ஆண்டுகளுக்குள் பிறகு கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. திரையரங்குகளிலும் படத்திற்கு அமோகமான புக்கிங் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்தை பிரான்ஸில் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடினர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Tags :
Advertisement