Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் மாநில மீனாக 'கோல்' மீன் அறிவிப்பு - முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!

12:10 PM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

உலக மீன்வள மாநாட்டில் 'கோல்' வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.

Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய மீன்வள மாநாட்டை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்து பேசினார்.

குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது: 

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்கீழ் குஜராத் சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மாநிலத்தின் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மாநிலத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.  இன்று 'கோல்' வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம். கோல் மீன் குஜராத் ஏற்றுமதி செய்யும் விலை உயர்ந்த மீன்வகைகளில் ஒன்றாகும். இதனை மாநில மீனாக அறிவிப்பதால்  கோல் வகை மீன்களை பற்றிய விழிப்புணர்வு உண்டாகும்.

இதையும் படியுங்கள்:மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ திரைப்படத்திற்கு 2 நாடுகளில் தடை!

நாட்டிலேயே மிக நீளமான 1,600 கிலோ மீட்டர் கடற்கரையை குஜராத் மாநிலம் கொண்டுள்ளது. கடல் மீன் உற்பத்தியில் குஜராத் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. 5000 கோடி ரூபாய்க்கு மேல் மீன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மீன் ஏற்றுமதியில் குஜராத்தின் பங்களிப்பு 17 சதவீதம்.

முதல் உலக மீன்வள மாநாட்டை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமான மாநிலம் குஜராத் ஆகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை கட்டியெழுப்புவதில் நீலப் பொருளாதாரம் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது.  நமது நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த துறையுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தனி அமைச்சகம் கூட இல்லை.

மேலும், மோடி பிரதமரான பின்புதான் நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகம் தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு மீன் உற்பத்தி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது" என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.

Tags :
AnnouncementBhupendra PatelCHIEF MINISTERgholfishGujaratNarendra modiPMOIndiaState Fish
Advertisement
Next Article