For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்! எங்கே நடந்தது தெரியுமா?

08:13 AM Mar 07, 2024 IST | Web Editor
217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்  எங்கே நடந்தது தெரியுமா
Advertisement

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில்  உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், பலர் உயிரிழந்தனர். இதனால்,உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு போடபட்டது.இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் 29 மாதங்களில் 217 தடவை, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அந்த நபர், கடந்த ஆண்டு நவம்பர் வரை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, நான்கு நாள் இடைவெளிக்கு ஒருமுறை, அந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அந்த நபர் பைசர், மாடர்னா உள்பட எட்டு விதமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

அந்த மனிதரின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரித்திருந்தாலும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவோ குறையவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது :

"ஜெர்மனியின் மாக்டேபர்க் பகுதியைச் சேர்ந்த முதியவர் 29 மாதங்களில் 217 தடவை, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது அவரின் உடல் அமைப்பை பொருத்தது, அவருடைய உடலுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் உண்டாகவில்லை. ஆனால், இது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது  இல்லை.  பொது மக்கள் தங்களின் உடலில் அதிகபட்சமாக 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் அல்லது 200 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் ஒரே விதமான பாதுகாப்பை தான் அளிக்கின்றன"

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement