’வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல்’ - முகமது யூனுஸ்!
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும் வங்காளதேசத்தின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனை தொடர்ந்து ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முகமது யூனுஸ் வங்காள தேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். வங்காளதேச மாணவர் போராட்டத்தின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று தொலைக்காட்சியில் தோன்றி உறையாற்றிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் பேசிய அவர், அடுத்த ரம்ஜானுக்கு முன்பு, பொதுத்தேர்தலை ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப் போவதாகவும், மேலும் இடைக்கால அரசாங்கத்தின் சார்பாக தேர்தல் நியாயமானதாகவும், அமைதியாகவும், பண்டிகையாகவும் நடத்தப்படுவதற்கு அனைத்து வகையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக அவர் கூறினார்.